/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கறவை மாடு வளர்க்க பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
/
கறவை மாடு வளர்க்க பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : மார் 08, 2025 03:46 AM
புதுச்சேரி : கறவை மாடு வளர்ப்பு பயிற்சி முகாமில் பங்கேற்க அட்டவணை இனத்தவர் பெயர் பதிவு செய்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன டீன் செழியன் செய்திக்குறிப்பு;
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக நிதியுதவியுடன், இந்திய உயிர் தொழில்நுட்ப நிறுவனம், ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்லுாரி இணைந்து கறவை மாடு வளர்க்கும் அட்டவணை இனத்தவர்களுக்கான சிறப்பு திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற அட்டவணை இன சான்றிதழ், ஆதார் அவசியம். குறைந்தபட்சம் 2 கறவை மாடுகள் வைத்திருக்க வேண்டும். பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினராக இருக்க வேண்டும்.
கையால் தீவனம் நறுக்கும் இயந்திரத்தை பயன்படுத்த விருப்பம் உள்ளவராக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு 4 நாள் பயிற்சி அளிக்கப்படும். இறுதியில் கறவை மாடு வளர்க்க இடுபொருட்கள் வழங்கப்படும். அட்டவணை இனத்தினர் 94990 47100 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு வரும் 11ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.