/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கழிவுநீர் இணைப்பு மாற்ற விண்ணப்பங்கள் வரவேற்பு
/
கழிவுநீர் இணைப்பு மாற்ற விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஆக 07, 2024 11:19 PM
புதுச்சேரி : புதுச்சேரியில் கழிவுநீர் இணைப்பை மாற்றி அமைத்திட, கழிவுநீர் உட்கோட்டத்தில், உதவி பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என, பொதுப்பணித்துறை சுகாதார கோட்டம் தெரிவித்துள்ளது.
பொதுப்பணித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள கழிவு நீர் இணைப்பை பாதாள சாக்கடை குழாயில் செப்டிக் டேங்கில் இருந்து நேரடியாக இணைத்து இருந்தால், அதை துண்டித்து இணைப்பை மாற்றி கழிவறைக்கும் பாதாள சாக்கடை குழாயிற்கும் நேரடியாக இணைப்பதற்க முன், நடுவில் சிறிய சோதனை தொட்டி அமைக்க வேண்டும்.
கழிவறை கோப்பையை எந்த விதத்திலும், செப்டிக் டேங்கின் மேல் அமைக்கக்கூடாது. கழிவறை கோப்பையின் அடிபாகத்தில், 'எஸ்' வடிவு அல்லது 'பி' வடிவு டிராப்பை பொருத்த வேண்டும். இப்படி பொருத்துவதன் மூலம் டிராப்பில் தண்ணீர் தடுப்பு இருப்பதனால் விஷ வாயு கழிவறையில் புகாது.
தற்போது இதுபோன்ற இணைப்பை மாற்றி அமைத்திட, ஒவ்வொருவரும் கழிவுநீர் உட்கோட்டத்தில், உதவி பொறியாளர் அலுவலகம், கழிவுநீர் உட்கோட்டம், பொதுசுகாதார கோட்டம், பொதுப்பணித்துறை, எண்: 54, லால்பகதுார் சாஸ்திரி தெரு, புதுச்சேரி - 1, என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.