/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பல்கலையில் எம்.டெக் படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு
/
பல்கலையில் எம்.டெக் படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு
பல்கலையில் எம்.டெக் படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு
பல்கலையில் எம்.டெக் படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : மே 28, 2024 03:54 AM
புதுச்சேரி, : புதுச்சேரி பல்கலையில் எம்.டெக்., படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
புதுச்சேரி பல்கலையில் உள்ள 7 எம்.டெக்., படிப்புகளுக்கு பல்கலை இணையதளத்தில் கடந்த 22ம் தேதி முதல் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வரும் 9ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.
எவ்வளவு சீட்டு
கம்ப்யூட்டர் சயின்ஸ்-15; இ.சி.இ.,-19; சுற்றுச் சூழல் பொறியியல் மேலாண்மை -15; பசுமை ஆற்றல் தொழில்நுட்பம் -16; நானோ சயின்ஸ் டெக்னலாஜி -16; நெட் ஒர்க் இன்பர்மேஷன் செக்யூரிட்டி -15; கம்ப்யூடேஷனல் பையாலஜி -4; என மொத்தம் 100 எம்.டெக்., சீட்டுகள் உள்ளன.
படிப்புகள் குறித்த தகவல் குறிப்பேட்டிற்கு https://www.pondiuni.edu.in/admissions-2024-25/ என்ற இணைய பக்கத்தில் பார்க்கலாம்.
கூடுதல் தகவல்களுக்கு admissions.pu@pondiuni.ac.in இ.மெயில் முகவரியிலும், 0413--2654876 என்ற உதவி மைய எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.