தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காளான், மசாலா செய்முறை பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

காளான், மசாலா செய்முறை பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

காளான், மசாலா செய்முறை பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : மே 10, 2024 12:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2024 12:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், காளான் செய்முறை மற்றும் மசாலா பொருட்கள் தயாரிப்பு பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

புதுச்சேரி லெனின் வீதியில் இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது.

இங்கு, காளான் செய்முறை மற்றும் மசாலா பொருட்கள் தயாரிப்பு பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியை சேர்ந்தவர்கள் வரும் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி வரும் 20ம் தேதி துவங்குகிறது.

இந்த பயிற்சியில் சேர 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 18 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும்.

இலவசமாக அளிக்கும் பயிற்சியில், உணவுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. 30 நாட்கள் நடக்கும் பயிற்சியில், 90 சதவீதம் செய்முறை பயிற்சி வழங்கப்படுகிறது.

பயிற்சியில் சேருபவர்கள், 8870497520, 9043489659, 0413 - 2246500 என்ற எண்ணிற்கு அவசியம் முன்பதிவு செய்யவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us