ADDED : மார் 23, 2024 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தேர்தல் பணிகளுக்கு,பா.ஜ., சார்பில், 29 தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில், 'இண்டியா' கூட்டணி சார்பில், காங்., வேட்பாளர் வைத்திலிங்கமும், தே.ஜ., கூட்டணி சார்பில், பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயமும், போட்டியிடுகின்றனர். புதுச்சேரியில் ஆளும் கூட்டணியாக உள்ளதால், வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியில் பா.ஜ., உள்ளது.
இந்நிலையில், தற்போது, புதுச்சேரி மாநிலத்தில், காரைக்கால், மாகி, ஏனாம் உள்ளிட்ட, 29 தொகுதிகளில், தேர்தல் பொறுப்பாளர்களை பா.ஜ., நியமித்துள்ளது. மண்ணாடிப்பட்டு - கண்ணன்; திருபுவனை - புகழேந்தி; வில்லியனுார் - ஏகாம்பரம்; கதிர்காமம் - முருகன், என தொகுதிக்கு ஒருவர் வீதம், மொத்தம், 29 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

