/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தி.மு.க., பிரசார குழு நிர்வாகிகள் நியமனம்
/
தி.மு.க., பிரசார குழு நிர்வாகிகள் நியமனம்
ADDED : மார் 22, 2024 05:54 AM
புதுச்சேரி : தி.மு.க., தேர்தல் பிரசார குழு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, தி.மு.க., அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் இண்டியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து, கூட்டணி கட்சியினருடன் இணைந்து தேர்தல் பரப்புரை செய்வதற்கு, புதுச்சேரி தி.மு.க., தேர்தல் பிரசார குழு அமைக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., அவைத் தலைவர் சிவக்குமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பிரசார குழுவின் உறுப்பினர்களாக தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் லோகையன், சோமசுந்தரம், வேணுகோபால், காயத்ரி ஸ்ரீகாந்த், முககமது ஹலித், இளைஞரணி துணை அமைப்பாளர் நித்திஷ், நர்கீஸ், சுமதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

