/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
என்.ஆர்.,காங்., கட்சியில் நிர்வாகிகள் நியமனம்
/
என்.ஆர்.,காங்., கட்சியில் நிர்வாகிகள் நியமனம்
ADDED : மார் 04, 2025 04:30 AM
புதுச்சேரி: என்.ஆர். காங்., மாநில அணி, தொகுதி அமைப்புகளுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் ஜெயபால் விடுத்துள்ள அறிக்கை:
என்.ஆர்., காங்., தலைவர் ரங்கசாமி, கட்சியில் மாநில அணி, தொகுதி அமைப்புகளுக்கு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி, மாநில வர்த்தகம் மற்றும் தொழில் முனைவோர் அணி தலைவராக வேலாயுதம் (எ) தினகரன், மாநில தொழிலாளர் (என்.ஆர்.டி.யு.சி.,) அணி தலைவராக குமணன், இந்திரா நகர் தொகுதி தலைவராக ராதாகிருஷ்ணன், மங்கலம் தொகுதி தலைவராக பழனி, ஏம்பலம் தொகுதி தலைவராக ராதாகிருஷ்ணன், அரியாங்குப்பம் தொகுதி தலைவராக முருகராஜ் நியமிக்கப் பட்டுள்ளனர்.