/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டசபை குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமனம்
/
சட்டசபை குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமனம்
ADDED : ஆக 08, 2024 11:07 PM
புதுச்சேரி: சட்டசபையின் பல்வேறு குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
சட்டசபையில் இடம் பெற்றுள்ள எம்.எல்.ஏ.க்களை கொண்டு பல்வேறு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக்குழு ஒவ்வொரு ஆண்டும் நியமிக்கப்பட வேண்டும்.
அதன்படி சட்டசபையின் குழு பதவி காலம் நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, சட்டசபை அலுவல் ஆலோசனை குழு, அரசாங்க உறுதிமொழி குழு, நடைமுறை விதிகள் குழு ஆகியவற்றிற்கு கடந்த 2023-24ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களே அந்தந்த குழுவிற்கு 2024-25ம் ஆண்டிற்குள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் 2024-25 ஆண்டிற்கான மனுக்கள் பட்டியல் குழுவுக்கு கல்யாணசுந்தரம், ஜான்குமார், சந்திரபிரியங்கா, செந்தில்குமார், பிரகாஷ்குமார், கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கட்டனர்.
இதேபோல் 2024-25 ஆண்டிற்கான உரிமை குழுவிற்கு ராஜவேலு, ஜான்குமார், சந்திர பிரியங்கா, கல்யாணசுந்தரம், அங்காளன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த குழுவிற்கு துணை சபாநாயகர் ராஜவேலு தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது.