/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சேவை செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு
/
சேவை செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு
ADDED : ஆக 17, 2024 02:49 AM

புதுச்சேரி: ஆன்மிகம், பொதுசேவை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், சிறந்த முறையில் சேவை செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
வில்லியனுார், தாசில்தார் அலுவலகத்தில், சப்-கலெக்டர் அலுவலகம், புதுச்சேரி இந்திய செஞ்சிலுவை சங்கம், வாஞ்சிநாதன் இளந்தொண்டர் மன்றம், வில்வம் அறக்கட்டளை ஆகியோர் இணைந்து நடத்திய, சுதந்திர தின விழா நடந்தது.
ஜவஹர் பள்ளி, சங்கர்ஸ் வித்யாலயா பள்ளி மற்றும் வில்லியனுார் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணவ - மாணவியர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், வில்லியனுார் சப்-கலெக்டர் சோமசேகர் அப்பா ராவ் கொட்டாரு, தேசியக்கொடி ஏற்றினார்.
வருவாய்த்துறை அதிகாரி புவனேஸ்வரி, தாசில்தார் சேகர், துணை தாசில்தார் நித்யானந்தன், புதுச்சேரி செஞ்சிலுவை சங்கத்தின் சேர்மன் லஷ்மிபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், பேனாக்கள், பென்சில், இனிப்புகள் வழங்கப்பட்டன. சப்-கலெக்டர், வருவாய்த்துறை அதிகாரிகள், பள்ளி தாளாளர்களுக்கு, சால்வைகள் அணிவிக்கப்பட்டு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் சிறப்பாக ஆன்மிக பணியாற்றிய பாஸ்கரன், சிறந்த பொது சேவை விழிப்புணர்வு ஏற்படுத்திய கலியமுருகன் உள்ளிட்டோருக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது. வில்லியனுார் பகுதியை சேர்ந்த வி.ஏ.ஓ.,க்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆஷா பணியாளர்கள், உதவி மகப்பேறு செவிலியர்கள் ஆகியோருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை வாஞ்சிநாதன் இளந்தொண்டர் மன்ற நிறுவனர் ராமன், வில்வம் பவுண்டேஷன் தசரதன் ஆகியோர் செய்திருந்தனர். வாஞ்சிநாதன் இளந்தொண்டர் மன்ற செயலர் வெங்கடேசன் நன்றி கூறினார்.