ADDED : பிப் 24, 2025 04:21 AM

புதுச்சேரி : தமிழ்ச்சங்கத்தில் உலக தாய்மொழி நாளை முன்னிட்டு பாவாணர் பிறந்தநாள் மற்றும் விருது பெற்ற அறிஞர்களுக்கான பாராட்டு விழா நடந்தது.
தமிழ்ச்சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலாளர் சீனுமோகன்தாசு வரவேற்றார். துணைத் தலைவர்கள் ஆதிகேசவன், திருநாவுக்கரசு, பொருளாளர் அருள்செல்வம், துணை செயலாளர் தினகரன் முன்னிலை வகித்தனர்.
காஞ்சிபுரம், பி.ஏ.வி., பன்னாட்டுப் பள்ளி துணை முதல்வர் சரவணன், துரைமாலிறையனுக்கு 'திருவள்ளுவர் விருது மற்றும் பொற்கிழி' வழங்கினார். புதுச்சேரி அகில உலக தமிழ் நண்பர்கள் சமூக மையம் கலைவேந்தன் தலைமையில் 'மொழிகளுக்கெல்லாம் தாயானவள்' என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. இதில், சிங்கை அருள்ராஜ், ஆனந்தராசன், சங்கர், ரவி, அன்புநிலவன் மண்ணாங்கட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, மத்திய மாநில அரசின் விருது தட்சிணாமூர்த்தி ( பத்மஸ்ரீ), சிலம்பு செல்வராசு (இளங்கோவடிகள் விருது), சச்சிதானந்தம் (அயோத்தி தாசர் பண்டிதர் விருது), பிரகாசு (கலைக்கான இளையோர் விருது) பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆட்சிக்குழு உறுப்பினர் உசேன் நன்றி கூறினார்.

