ADDED : ஜூலை 05, 2026 07:23 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி எம்.ஜி.ஆர். பேரவை சார்பில் 15ம் ஆண்டு புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
தமிழ் சங்க வளாகத்தில் நடந்த விழாவிற்கு, சுப்ரமணியன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற தாசில்தார் பிரபாகரன், கோதண்டபாணி, ராஜா முன்னிலை வகித்தனர். மாசிலாமணி, தமிழ்செல்வம், சித்தானந்தம், தரணிதேவி வரவேற்றனர்.
விழாவில், அமைச்சர் சிவக்கொழுந்து பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, புதிய நிர்வாகிகளை பாராட்டி பேசினார்.
இதில், த.வெ.க., பிரமுகர் சுத்துகேணி பாஸ்கர், எல்.ஐ.சி., முதன்மை முகவர் சாம்ராஜ், முன்னாள் வங்கி அதிகாரி ரங்கநாதன், முன்னாள் வருவாய்த்துறை அதிகாரி சோமசுந்தரம், முன்னாள் ஆசிரியர் பரமேஸ்வரி ஆகியோர் வாழ்த்தி பேசினர். மார்க்கெட்டிங் மேலாளர் ஜெயராம் நன்றி கூறினார்.
