/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரெஞ்சு வழியில் படித்து சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா
/
பிரெஞ்சு வழியில் படித்து சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா
பிரெஞ்சு வழியில் படித்து சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா
பிரெஞ்சு வழியில் படித்து சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா
ADDED : ஜூலை 01, 2024 06:30 AM

புதுச்சேரி : கல்வே காலேஜ் அரசு ஆண்கள் பிரெஞ்சு உயர்நிலை பள்ளியில் பிரெஞ்சு வழியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் செங்கேணியம்மாள் தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர்கள் ஆரோக்கியராஜ், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல் மூன்று இடங்களை பிடித்து மாணவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர் புதுச்சேரி பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பிரெஞ்சு துறை தலைவர் வெங்கட்ராமன் மாணவர்களை பாராட்டினார். பெண் கல்வித்துறை இயக்குனர் சிவராம ரெட்டி, காஞ்சி மாமூனிவர் பட்ட மேற்படிப்பு மைய பிரெஞ்சு துறை பேராசிரியர் சுப்புராய நாயக்கர், கல்வி துறை வட்ட ஆய்வாளர் குலசேகரன், பொறுப்பாசிரியர் ராஜன் ஜார்ஜ், ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் வேலாயுதம் நன்றி கூறினார்.