தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா
தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா
ADDED : ஜூன் 12, 2026 07:01 PM
புதுச்சேரி: காலாப்பட்டு, பரூக் மறைக்காயர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்னர் வீல் பாண்டிச்சேரி காஸ்மாஸ் சங்கம் சார்பில், 10வது மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கான பாராட்டு விழா நடந்தது.
பள்ளியின் துணை முதல்வர் பிரேம் ஜூலியன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் பூங்குன்றம் முன்னிலை வகித்தார். விரிவுரையாளர் சாந்தி வரவேற்றார். சங்கத்தின் தலைவர் கோகிலா மாணிக்கம், செயலாளர் தமிழரசி பழனியப்பன், சிந்துஜா கார்த்திக், வாணி தண்டபாணி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு கைக்கடிகாரம் பரிசு வழங்கி பாராட்டினர்.
ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் சிவசக்தி நன்றி கூறினார். விரிவுரையாளர் மேரி ஆரோக்கியம் கிளன்டின் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் வேல் விழி, பழனியப்பன் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ஜோசப் பாரதி ஆகியோர் செய்திருந்தனர்.
தொடர்ந்து, நாட்டுப் நலப்பணி திட்டம் மூலம் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
