தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவருக்கு பாராட்டு விழா

மாணவருக்கு பாராட்டு விழா

மாணவருக்கு பாராட்டு விழா


ADDED : ஜூன் 24, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உலக சாதனைப்படைத்த பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா நடந்தது.

புதுச்சேரி பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் சாய்பிரணவ். இவர் 12 வயதில் நுாறு உலக சாதனை படைத்துள்ளார். இவருக்கான பாராட்டு விழா, பள்ளியில் நடந்தது. பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் தலைமை தாங்கி பேசுகையில், ‘செஞ்சுரி உலக சாதனையாளர் என்ற பட்டத்தை சாய் பிரணவ் படைத்துள்ளார்.

2019ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை 75 உலக சாதனைகளை படைத்தார். தொடர்ந்து 2026ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மேலும் 25 உலக சாதனைகளை படைத்து 100 உலக சாதனைகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.

இவரது சாதனைகள் பெரும்பாலும் கண்கட்டிய நிலையிலேயே செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது அவரது அபாரமான ஒருமுகப்படுத்தும் திறன், நினைவாற்றல், தன்னம்பிக்கை, படைப்பாற்றல், மன உறுதி மற்றும் ஒருமுகப் படுத்தும் திறனை காட்டுகிறது’ என்றார்.

சிறப்பு விருந்தினர் நாராயணசாமி எம்.எல்.ஏ., பாராட்டுகையில், ‘சாய்பிரணவ் தனது சாதனைகளை சமூக பொறுப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் கருவியாக பயன்படுத்தியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார்.

உலக சாதனைக்கு உறுதுணையாக இருந்த பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்களுக்கு நன்றி தெரிவிக்கபட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us