/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியை சேர்ந்தவருக்கு பிரான்சில் பாராட்டு விழா
/
புதுச்சேரியை சேர்ந்தவருக்கு பிரான்சில் பாராட்டு விழா
புதுச்சேரியை சேர்ந்தவருக்கு பிரான்சில் பாராட்டு விழா
புதுச்சேரியை சேர்ந்தவருக்கு பிரான்சில் பாராட்டு விழா
ADDED : மே 29, 2024 05:24 AM

புதுச்சேரி : ஐரோப்பிய பார்லிமென்ட் உறுப்பினர் பதவி வகிக்கும் புதுச்சேரியை சேர்ந்தவருக்கு பாராட்டு விழா நடந்தது.
புதுச்சேரியில் பிறந்து பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து, பிரான்ஸ் அரசியலில் உயர்ந்த பதவியான ஐரோப்பிய பார்லிமென்ட் உறுப்பினர் பதவியில் உள்ள கய் லவோகாட்டுக்கு, பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழர்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
விழாவில், பிரான்ஸ் வெங்கடேஸ்வர சுவாமி கோவிலின் தலைவர் கண்ணபிரான் வரவேற்றார். ழான் இளங்கோ, ராஜ் நீலவண்ணன், அருண் பார்த்தசாரதி, மதி பிரபாகரன், இலங்கை வேந்தன், செல்வா அண்ணாமலை, தீன் என்குய்யன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
கய் லவோகாட் 'உயர்ந்த பதவியை அடைவதற்கு கடந்து வந்த பாதைகளை விளக்கி கூறினார்.
மேலும், அடுத்த மாதம் நடக்கும் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் அவசியம், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.
பிரான்ஸ் வெங்கடேஸ்வர சுவாமி கோவிலின் தலைவர் கண்ணபிரான் பேசுகையில், 'பிரான்சில் வாழும் இந்தியர்களும் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
பிரான்சில் கலாசார மையத்துடன் கோவில் கட்டுவதற்கு அரசின் அனுமதியை பெற உதவுமாறு பிரான்ஸ் வெங்கடேஸ்வர சுவாமி கோவில் சார்பில், கய் லவோகாட்டிடம் மனு அளிக்கப்பட்டது.