தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தபால் ஓட்டு பதிவு செய்யும் இடத்தில் பா.ஜ., - காங்., இடையே வாக்குவாதம்

தபால் ஓட்டு பதிவு செய்யும் இடத்தில் பா.ஜ., - காங்., இடையே வாக்குவாதம்

தபால் ஓட்டு பதிவு செய்யும் இடத்தில் பா.ஜ., - காங்., இடையே வாக்குவாதம்


ADDED : ஏப் 05, 2024 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2024 05:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தபால் ஓட்டுப் பதிவு செய்யும் இடத்தில், பா.ஜ., காங்., இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியில் வரும் 19ம் தேதி ஓட்டு பதிவு நடக்கிறது. அதையடுத்து, கடந்த 2ம் தேதி முதல் தபால் மூலம் ஓட்டுப் பதிவு தொடங்கியது. தேர்தல் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று, முதியோர், மாற்றுத்திறனாளி ஆகியோர்களை சந்தித்து, தபால் ஓட்டுகளை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2ம் தேதி சேதராப்பட்டு, பகுதியில் தபால் ஓட்டுப் பதிவு நடந்தது. அப்பகுதிக்கு பா.ஜ., நிர்வாகிகள் சென்றனர். அதனை அறிந்த காங்., நிர்வாகிகள் அங்கு சென்று பா.ஜ.,வினரை கண்டித்தனர்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தகவலறிந்த, வில்லியனுார், சப் கலெக்டர் சோமு சேகர அப்பாவு கொட்டாரு சம்பவ இடத்திற்கு சென்று இரு கட்சியினரை சமாதானம் செய்து, அனுப்பி வைத்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us