/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதிய போலீசார் இல்லாமல் திணறும் அரியாங்குப்பம் காவல் நிலையம்
/
போதிய போலீசார் இல்லாமல் திணறும் அரியாங்குப்பம் காவல் நிலையம்
போதிய போலீசார் இல்லாமல் திணறும் அரியாங்குப்பம் காவல் நிலையம்
போதிய போலீசார் இல்லாமல் திணறும் அரியாங்குப்பம் காவல் நிலையம்
ADDED : மார் 02, 2025 04:13 AM
அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் 8 போலீசார் மட்டுமே பணியில் இருப்பதால், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடியாமல், அதிகாரிகள் திணறுகின்றனர்.
தெற்கு பகுதியில், அரியாங்குப்பம் காவல் நிலையம் முக்கியத்துவம் வாய்ந்தாக உள்ளது. தெற்கு பகுதி எஸ்.பி., அலுவலகம், காவல் நிலைய வளாகத்தில் இயங்கி வருகிறது. அரியாங்குப்பத்தை சுற்றியுள்ள, பகுதியில், சொசுகு தங்கும் விடுதிகள், பெரிய ஓட்டல், ரிசார்ட்டுகள், படகு குழாம், சின்ன வீராம்பட்டினம், கடற்கரை தனியார் படகு குழாம், உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வார விடுமுறையான சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் படையெடுத்து வருகின்றனர்.
காவல் நிலையத்தில், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர், பெண் போலீஸ் 7 பேர், என மொத்தம் 23 பேர் பணி புரிய வேண்டும். ஆனால், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் என 8 பேர் மட்டுமே தற்போது, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில், ஈடுபட்டு வருகின்றனர்.
மற்ற போலீசார், எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர் அலுவலக பணிக்காகவும், சில போலீசார் மற்ற பணிக்காகவும் செல்கின்றனர்.
பெண் போலீசார் சிலர் மகப்பேறு விடுப்பில் சென்றுள்ளனர். போதிய போலீசார் இல்லாமல், இருப்பதால், வெளி இடங்களில் ரோந்து பணி, சட்டம் ஒழுங்கு பிரச்னை என்றால், போலீசாரை அனுப்ப முடியாமல், காவல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். மேலும், போலீஸ் வாகனத்தை சப் இன்ஸ்பெக்டரே ஓட்டும் நிலை உள்ளது. சென்சிட்டிவான இந்த காவல் நிலையத்தில், போதிய போலீசாரை நியமிக்க உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.