/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆரியப்பாளையம் புதிய பாலம் இணைப்பு சாலையில் விரிசல்
/
ஆரியப்பாளையம் புதிய பாலம் இணைப்பு சாலையில் விரிசல்
ஆரியப்பாளையம் புதிய பாலம் இணைப்பு சாலையில் விரிசல்
ஆரியப்பாளையம் புதிய பாலம் இணைப்பு சாலையில் விரிசல்
ADDED : ஆக 24, 2024 06:19 AM

புதுச்சேரி: புதுச்சேரி - விழுப்புரம் இணைக்கும் முக்கிய வழித்தடமான சங்கராபரணி ஆற்றுப்பாலம் புதிதாக கட்ட கடந்த 2022 பிப்., 11ம் தேதி அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகள் துவங்கியது.
பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு மூலம் ரூ. 68 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம், எம்.என்.குப்பம் துவங்கி வில்லியனுார் வரை சாலை விரிவாக்கம், வில்லியனுார் பைபாசில் இருந்து இந்திரா சிக்னல் வரை சாலையோரம் ப வடிவ வடிகால் வாய்க்கால், சென்டர் மீடியன் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.
மழை காலங்களில் ஆற்றில் வரும் வெள்ளம் எளிதாக கடந்து செல்லும் வகையில், ஆரியப்பாளையம் சங்கராபணி ஆற்றில் 17 பில்லர்கள் (துாண்கள்) உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்துடன் தார் இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
பாலத்தின் உறுதி தன்மையை அறிந்து கொள்ள வாகன சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.
முறைப்படியான பாலம் திறப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆரியப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து பாலத்தை இணைக்கும் இணைப்பு சாலை பகுதியில் விரிசல்விழுந்துள்ளது.

