தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொலைநோக்கி மூலம் கிரகங்கள் பார்க்க ஏற்பாடு

தொலைநோக்கி மூலம் கிரகங்கள் பார்க்க ஏற்பாடு

தொலைநோக்கி மூலம் கிரகங்கள் பார்க்க ஏற்பாடு


ADDED : செப் 09, 2024 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2024 05:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லாஸ்பேட்டை அறிவியல் கழகம் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கோளரங்கம் சார்பில், கிரகங்கள் ஒரு நேர்கோட்டில் இணைவதை தொலைநோக்கி மூலம் பொதுமக்கள் பார்வையிட்டனர்.

சூரியன், சனி, பூமி ஆகிய 3 கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் வரும் போது சூரியன், சனி கிரகம் மற்ற நாள்களை விட பெரிதாக தெரியும். இதனை பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில், லாஸ்பேட்டை அறிவியல் கழகம் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கோளரங்கம் சார்பில் லாஸ்பேட்டை மைதானத்தில் நேற்று மாலை ஏற்பாடு செய்திருந்தனர்.

ஏராளமான மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் தொலைநோக்கி மூலம் சனி கிரகத்தையும், அதனை சுற்றி பிரதிபலித்த கோட்டையும் பார்த்து ரசித்தனர்.

பாரதிதாசன் மகளிர் கல்லுாரி இயற்பியில் துறை பேராசிரியர் மதிவாணன், வானில் நிகழும் நிகழ்வுகள் குறித்து அங்கு வந்த பொதுமக்களுக்கு விளக்கி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us