/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இன்று தேசிய வருவாய் வழி தேர்வு 16 மையங்களில் 3,639 பேர் எழுத ஏற்பாடு

ADDED : மார் 01, 2025 05:56 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் 16 மையங்களில், இன்று தேசிய வருவாய் வழி தேர்வு நடக்கிறது.
இதுகுறித்து, பள்ளி கல்வி துறை இணை இயக்குநர் சிவகாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
டில்லியில் உள்ள மத்திய கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, 2024-25ம் கல்வி ஆண்டிற்கான, தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவி தொகை தேர்வு, புதுச்சேரியில் இன்று (1ம் தேதி) காலை 9:30 மணிக்கு துவங்கி மதியம் 12:45 மணி வரை நடக்கிறது.
நான்கு பிராந்தியங்களில், 16 தேர்வு மையங்களில் நடக்கும் இத்தேர்வை பள்ளி கல்வி துறை நடத்துகிறது. அரசு மற்றும் தனியார் உதவி பெறும் பள்ளிகளில், 8ம் வகுப்பு பயிலும் 3,639 மாணவர்கள் எழுத உள்ளனர்.
புதுச்சேரியில் 11 மையங்களில் 2,684 மாணவர்களும், காரைக்காலில் 3 மையங்களில் 745 பேரும், மாகியில் ஒரு மையத்தில் 87 பேரும், ஏனாமில் ஒரு மையத்தில் 123 பேரும் எழுத உள்ளனர். இவர்களுக்கான ஹால்டிக்கெட், மாணவர்கள் பயிலும் பள்ளிக்கு இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.