/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொது இடத்தில் தகராறு 2 வாலிபர்கள் கைது
/
பொது இடத்தில் தகராறு 2 வாலிபர்கள் கைது
ADDED : மே 03, 2024 10:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம், - பொது இடத்தில் தகராறு செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், செந்துார் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 29. இவர் மது குடித்துவிட்டு நேற்று காலை மடுகரை பஸ் நிலையத்தில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தார். தகவலறிந்த மடுகரை போலீசார் அங்கு விரைந்து சென்று ராஜ்குமாரை கைது செய்தனர்.
இதேபோல், நெட்டப்படாக்கம் சந்திப்பில் குடித்து விட்டு தகராறு செய்த தமிழக பகுதியைச் சேர்ந்த மிட்டாமண்டகப்பட்டு புதுக்காலனியைச் சேர்ந்த சதீஷ், 32, என்பவரை நெட்டப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.