/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மது பாட்டில்கள், சாராயம் கடத்தியவர் கைது
/
மது பாட்டில்கள், சாராயம் கடத்தியவர் கைது
ADDED : ஏப் 11, 2024 03:53 AM

திருக்கனுார்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு திருக்கனுார் பகுதியில் விதிமுறைகளை மீறி விற்பனை செய்த 14 மது பாட்டில்கள் மற்றும் 56 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி லோக்சபா தேர்தலை முன்னிட்டு தேர்தல் துறை பறக்கும் படையினர், போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பிரியா, உதவி சப் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, மணலிப்பட்டு எல்லைப் பகுதி வழியாக வந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அதில், 14 மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஆலகிராமம் பகுதியை சேர்ந்த மாசிலாமணி, 45; என்பரை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், கூனிச்சம்பட்டு மேம்பாலத்தின் கீழே விற்பனைக்கு வைத்திருந்த 21 லிட்டர் சாராய பாக்கெட்கள் மற்றும் செல்லிப்பட்டு படுகையணை அருகே சாக்கு பையில் விற்பனை செய்து கொண்டிருந்த 35 லிட்டர் சாராய பாக்கெட்களை அகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்து, கலால் துறையிடம் ஒப்படைத்தனர்.

