ADDED : ஜூன் 30, 2024 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பொது இடத்தில் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ரெட்டியார்பாளையம் - வில்லியனுார் சாலையில், வாலிபர் ஒருவர் நின்றுகொண்டு அந்த வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறு செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, ரெட்டியார்பாளையம் போலீசார், அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர், புதுச்சேரி வசந்தம் நகரை சேர்ந்த பிரசாந்த், 34; என தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.