/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் கலை போட்டிகள் ஜூலை 28ம் தேதி நடக்கிறது
/
புதுச்சேரியில் கலை போட்டிகள் ஜூலை 28ம் தேதி நடக்கிறது
புதுச்சேரியில் கலை போட்டிகள் ஜூலை 28ம் தேதி நடக்கிறது
புதுச்சேரியில் கலை போட்டிகள் ஜூலை 28ம் தேதி நடக்கிறது
ADDED : ஜூன் 26, 2024 02:39 AM
புதுச்சேரி : .தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களிடையே, ஸ்ரீராம் இலக்கிய கழகம், வரும் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 25 வரை, திருக்குறள் பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்த உள்ளது.
இந்த போட்டிகள் மொத்தம், 12 மையங்களில் நடைபெற உள்ளது. இதில் புதுச்சேரியில் வரும், ஜூலை, 28ம் தேதி, மறைமலை அடிகள் சாலையில் உள்ள, செயின்ட் ஆண்டனி'ஸ் உயர்நிலைப் பள்ளியில் நடக்கிறது.
இப்போட்டியானது, இடைநிலை, மேல்நிலை, கல்லுாரி என மூன்று பிரிவுகளாக நடக்க உள்ளது. மாணவர்களிடையே, திருக்குறளின் கருத்துகளைப் பரப்பவும், தமிழாற்றலை வளர்க்கவும், ஓவியத்திறனை ஊக்குவிக்கவும் கடந்த ,1988ம் ஆண்டு முதல் ஸ்ரீராம் இலக்கியக் கழகம் இப்போட்டியினை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.