தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆறுபடை வீடு மருத்துவ கல்லுாரி பட்டமளிப்பு விழா

ஆறுபடை வீடு மருத்துவ கல்லுாரி பட்டமளிப்பு விழா

ஆறுபடை வீடு மருத்துவ கல்லுாரி பட்டமளிப்பு விழா


ADDED : செப் 10, 2024 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2024 06:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: கிருமாம்பாக்கம் ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.

விழாவில், விநாயகா மிஷன்ஸ் ரிசர்ச் பவுண்டேஷன் வேந்தர் டாக்டர் கணேசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தெலுங்கானாவில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் விகாஸ் பாட்டியா பங்கேற்று, மருத்துவத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கி சிறப்புரையாற்றினர்.

விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் வேந்தர் டாக்டர் கணேசன், சிறந்த மருத்துவ பட்டதாரி மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கம் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிர்வாக குழு உறுப்பினர் சுரேஷ் சாமுவேல் வாழ்த்தி பேசினார். விழாவில், முதுகலை மருத்துவத்தில் 10 பேருக்கும், இளங்கலை மருத்துவத்தில் 112 பேருக்கும் பட்டங்களும், அதிக மதிப்பெண் பெற்ற 10 பேருக்கு பதக்கங்களும் வழங்கப்பட்டது. முன்னதாக, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சதிஷ் கோரக் குருவில்லா வரவேற்றார்.

கல்லுாரி முதல்வர் ராஜேஷ் சேகல் ஆண்டறிக்கை வாசித்தார். மருத்துவ ஆய்வு பிரிவு இயக்குநர் டாக்டர் சர்மன் சிங் அறிமுக உரையாற்றினார்.

விழாவில், டீன் டாக்டர் மகாலட்சுமி, மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஜெய்சிங், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மருத்துவ மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி துணை முதல்வர் டாக்டர் ராஜன் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us