/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரவிந்தர் பிறந்த நாள் விழா கிரிக்கெட் போட்டி துவக்கம்
/
அரவிந்தர் பிறந்த நாள் விழா கிரிக்கெட் போட்டி துவக்கம்
அரவிந்தர் பிறந்த நாள் விழா கிரிக்கெட் போட்டி துவக்கம்
அரவிந்தர் பிறந்த நாள் விழா கிரிக்கெட் போட்டி துவக்கம்
ADDED : ஆக 17, 2024 02:43 AM

புதுச்சேரி: மொரட்டாண்டியில், அரவிந்தரின் பிறந்தநாளையொட்டி கிரிக்கெட் போட்டி துவக்க விழா நடந்தது.
சுதந்திர தினம் மற்றும் அரவிந்தரின், 152வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, ஒருமைப்பாட்டை வலியுறுத்தி ஆரோவில் அறக்கட்டளை சார்பில், நடக்கும் கிரிக்கெட் போட்டி நேற்று மொரட்டாண்டி பல்மைரா மைதானத்தில் துவங்கியது. போட்டிகள் 3 நாட்கள் நடக்கிறது.
போட்டியை ஆரோவில் அறக்கட்டளை இயக்குநர் சொர்ணாம்பிகா துவக்கி வைத்து பேசியதாவது:
ஆரோவில் சர்வதேச நகரைச்சுற்றியுள்ள, 16 கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், ஆரோவில் இளைஞர்களுக்கும் இடையே நட்புறவை வலுப்படுத்தும் விதமாக, நல்லெண்ண நோக்கில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. மத்திய கலாசாரம் மற்றும் மத்திய கல்வித்துறை அமைச்சகம் இணைந்து அரவிந்தரின் கனவை நிலை நிறுத்தும் வகையில் இந்தப் போட்டி அமையும்' என்றார்.
விழாவில் ஊராட்சித்தலைவர்கள் வசந்தி, வெங்கடேசன், மீனவ பேரவை புதுச்சேரி மாநிலத் தலைவர் குணசீலன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.