தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரியாங்குப்பம் காய்கறி மார்க்கெட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் பரபரப்பு

அரியாங்குப்பம் காய்கறி மார்க்கெட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் பரபரப்பு

அரியாங்குப்பம் காய்கறி மார்க்கெட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் பரபரப்பு


ADDED : மே 23, 2024 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2024 05:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் காய்கறி மார்க்கெட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு அதிரடியாக அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியாங்குப்பம், வீராம்பட்டினம், முருங்கப்பாக்கம், மணவெளி, நோணாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் அரியாங்குப்பம் காய்கறி மார்க்கெட்டிற்கு வந்து செல்கின்றனர்.

பெரிய மார்க்கெட் என்பதால், பொதுமக்கள் மட்டும் இல்லாமல், சிறு கடை வியாபாரிகள் தங்களது வாகனங்களை மார்க்கெட் சாலையிலேயே நிறுத்தி விட்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதனால், மார்க்கெட் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

காய்கறி மார்க்கெட்டில், வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்து, வியாபாரம் செய்து வருகின்றனர்.

சிலர் சாலையில் சிமென்ட் கட்டைகளை அமைத்துள்ளனர். இதனால், பொதுமக்கள் மார்க்கெட்டில் உள்ளே சென்று வெளியில் வருவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இது பற்றி, பொதுமக்கள் மற்றும் பல்வேறு பொது நல அமைப்பினர் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரிடம் புகார் தெரிவித்தனர்.

அதையடுத்து, நேற்று ஆணையர் ரமேஷ் முன்னிலையில், அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் மார்க்கெட் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர். அதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us