/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராகுல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி அசோக்பாபு எம்.எல்.ஏ., தர்ணா
/
ராகுல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி அசோக்பாபு எம்.எல்.ஏ., தர்ணா
ராகுல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி அசோக்பாபு எம்.எல்.ஏ., தர்ணா
ராகுல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி அசோக்பாபு எம்.எல்.ஏ., தர்ணா
ADDED : ஜூலை 03, 2024 02:57 AM

புதுச்சேரி: ஹிந்து மக்களை வன்முறையாளர்கள் என கூறிய ராகுல் மன்னிப்பு கோர வலி யுறுத்தி பா.ஜ., எம்.எல்.ஏ., அசோக்பாபு, சட்ட சபை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.
லோக்சபாவில் ஜனாதிபதி உரை மீதான விவாதத்தில் நேற்று முன்தினம் தங்களை ஹிந்து என கூறிக் கொள்பவர்கள், 24 மணி நேரமும் வன்முறையை, வெறுப்பை துாண்டி விடுகின்றனர் என லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல் பேசினார். இதனை கண்டித்தும், ராகுல் ஹிந்து சமுதாய மக்களிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும், புதுச்சேரி சட்டசபை வளாகத்தில், பா.ஜ., நியமன எம்.எல்.ஏ., அசோக்பாபு, நேற்று காலை 10:00 மணிக்கு, கையில் பதாகையுடன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
சபாநாயகர் செல்வம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அசோக்பாபு எம்.எல்.ஏ., போராட்டத்தை கைவிட்டார்.