/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனைத்து வாய்க்கால்களையும் துார்வார வேண்டும் அசோக்பாபு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

ADDED : ஆக 13, 2024 05:11 AM
புதுச்சேரி: 'பருவமழை துவங்குவதற்கு முன், போர்க்கால அடிப்படையில் அனைத்து வாய்க்கால்களையும் துார் வார வேண்டும்' என, அசோக்பாபு எம்.எல்.ஏ., பேசினார்.
ஜீரோ நேரத்தில் நேற்று அவர் பேசியதாவது:
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழை நின்றாலும் மழை தண்ணீர் வடியவில்லை. ஒரு மணி நேரம் பெய்த மழைக்கே நகர பகுதி முழுவதும் தத்தளிக்கிறது.
வடிகால் கட்டமைப்பில் குறைபாடு உள்ளது. மழை பெய்யும்போது மக்கள் அச்சப்படுகின்றனர். பொதுமக்களின் உடமைக்கும் உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத சூழல் நிலவுகிறது.
வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்க உள்ளது. இந்தியா முழுவதும் பல மாநிங்களில் மேகவெடிப்பு காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. எனவே, புதுச்சேரி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
பருவமழை துவங்குவதற்கு முன், போர்க்கால அடிப்படையில் அனைத்து வாய்க்கால்களையும் பொதுப்பணித் துறை, உள்ளாட்சி துறை வாயிலாக துார் வார வேண்டும்.
பொதுப்பணித்துறையில் குறிப்பாக நீர்பாசனக் கோட்டம், பொது சுகாதாரக் கோட்டங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பொறியாளர்கள், ஓவர்சீர் உள்ளிட்ட சீனியர் ஊழியர்களை கொண்ட குழு அமைத்து, எந்தந்த இடங்களில் தொடர்ச்சியாக மழை நீர் தேங்குகிறது என்பதை கண்டறிய வேண்டும். மழை நீர் தேங்காமல் வழிந்தோடுவதற்கான பணிகளை முடுக்கி விட வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.