/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூலி தொழிலாளி மீது தாக்குதல்; 3 பேருக்கு வலை
/
கூலி தொழிலாளி மீது தாக்குதல்; 3 பேருக்கு வலை
ADDED : ஏப் 12, 2024 04:34 AM
நெட்டப்பாக்கம் : கூலித்தொழிலாளியை உருட்டு கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
ஏரிப்பாக்கம் பழைய காலனியைச் சேர்ந்தவர் காந்தி 45; இவர் நேற்று முன்தினம் இரவு மனைவியுடன் வீட்டின் எதிரில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த தயாளன், 22; அவரது நண்பர்கள் பரத், 21; துரை, 23; ஆகியோர் சேர்ந்து காந்தி வீட்டில் எதிரில் இருந்த தெரு மின் விளக்கு பல்பை கழற்றினர். இதனை காந்தி தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த தயாளன் உள்ளிட்ட மூவரும் அங்கு கிடந்த உருட்டு கட்டையால் காந்தியை சரமரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த காந்தி அரசு பொது மருத்துவமைனயில் சேர்த்தனர்.
புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் வழக்குப் பதிந்து, தயாளன் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்.

