ADDED : ஆக 13, 2024 05:19 AM
பாகூர்: பாகூர் மூலநாதர் நகரை சேர்ந்தவர் சிவா மனைவி ராஜேஸ்வரி 45; இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சிவா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில், கடந்த 8ம் தேதி இரவு ராஜேஸ்வரி வீட்டில் இருந்த போது, எதிர் வீட்டை சேர்ந்த தண்டபாணி வந்து வீட்டின் கதவை தட்டி உள்ளார்.
ராஜேஸ்வரி அவரிடம் ஏன் கதவை தட்டுகிறாய் என கேட்டபோது, அவருக்கும் தண்டபாணியின் மனைவி செல்விக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மறுநாள் மாலை ராஜேஸ்வரி வீட்டின் எதிரே நின்றிருந்த போது, செல்விக்கும், அவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், செல்வி, அவரை தடியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில், படுகாயமடைந்த ராஜேஸ்வரி பாகூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

