/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வக்கீல்கள் சேம நல நிதியை முழுமையாக வழங்க வேண்டும் முதல்வரிடம் சங்க நிர்வாகிகள் மனு

ADDED : ஆக 02, 2024 01:28 AM

புதுச்சேரி: 'புதுச்சேரி வக்கீல்கள் சேம நல நிதி திட்டத்திற்கு அரசு அறிவித்த நிதியை முழுமையாக வழங்க வேண்டும்' என, முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டது.
புதுச்சேரி மாநில வக்கீல் சங்கத்தலைவர் ரமேஷ், பொதுச்செயலாளர் நாராயணகுமார், துணைத்தலைவி இந்துமதி புவனேஸ்வரி, பொருளாளர் ராஜ பிரகாஷ் ஆகியோர் முதல்வர் ரங்கசாமியை நேற்று சந்தித்தனர். அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், வக்கீல்கள் அலுவலக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நடப்பு பட்ஜெட்டில், நிதி ஒதுக்கி அந்த கட்டடத்தை கட்டிக்கொடுக்க வேண்டும்.
புதுச்சேரி வக்கீல்கள் சேம நல நிதி திட்டத்திற்கு, ரூ.1 கோடி அறிவித்து அதில், ரூ.20 லட்சம் சங்கத்திற்கு ஏற்கனவே அரசு கொடுத்து விட்டது. இந்த நிலையில் அறிவித்த தொகையை வக்கீல்கள் சேம நல திட்டத்திற்கு நிதி ஒதுக்கி கொடுக்க வேண்டும்.
இளம் வக்கீல்களுக்கான ஊக்கத்தொகை ரூ.5 ஆயிரம் என உயர்த்தி அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக இளம் வக்கீல்களுக்கான, ஊக்கத்தொகை கொடுக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.