/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்லுாரி மாணவி மீது தாக்குதல் வாலிபருக்கு வலை
/
கல்லுாரி மாணவி மீது தாக்குதல் வாலிபருக்கு வலை
ADDED : ஆக 24, 2024 06:06 AM
பாகூர்: செவிலியர் கல்லுாரி மாணவியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருமாம்பாக்கம் இந்திரா நகைரை சேர்ந்தவர் சந்துரு 24. இவர், செவிலியர் கல்லுாரி மாணவி ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு தலைபட்டசமாக காதலித்து வந்தார். இந்நிலையில், கடந்த 21ம் தேதி, கல்லுாரியில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்த அந்த மாணவியை, சந்துரு வழிமறித்து தன்னை காதலிக்க கூறி கட்டாயப்படுத்தி உள்ளார்.
அதற்கு, அந்த மாணவி மறுத்த நிலையில், ஆத்திரமடைந்த சந்துரு, அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.
அந்தப் பெண் கூச்சலிடவே சந்துரு அங்கிருந்து தப்பி சென்றார். தாக்குதலில் காயமடைந்த மாணவி, கிருமாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார், வழக்கு பதிந்து செய்து, சந்துருவை தேடி வருகின்றனர்.

