ADDED : மே 29, 2026 07:11 PM
பாகூர்: சலுான் கடைக்காரர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர் அடுத்த குருவிநத்தம், பெரியார் நகர், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சர்பஸ்ஸ்ரீ, 32; பாகூரில் சலுான் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மதியம் காரில் கடலுார் நோக்கி சென்று கொண்டிருந்தார். சோரியாங்குப்பத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்கு நின்று இருந்தார். அப்பொழுது, அங்கு மற்றோரு காரில் வந்த சோரியாங்குப்பத்தைச் சேர்ந்த மணிசேகர், சர்பஸ்ஸ்ரீயை பார்த்து அசிங்கமாக திட்டினார்.
இதற்கு, சர்பஸ்ஸ்ரீ, ஏன் திட்டுகிறாய் என்று கேட்டார். அங்கு வந்த விஷ்ணு என்பவர் எங்க ஊரைச் சேர்ந்த மணிசேகரிடம் ஏன் பிரச்னை செய்கிறாய் என, கேட்டு அவரை இருவரும் தாக்கினர். காயமடைந்த சர்பஸ்ஸ்ரீ, பாகூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பாகூர் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தார். அதன்பேரில், மணிசேகர், விஷ்ணு ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
