/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிம்ஸ் மருத்துவ கல்லுாரியில் 'ஆரா 2024' கலைவிழா
/
பிம்ஸ் மருத்துவ கல்லுாரியில் 'ஆரா 2024' கலைவிழா
ADDED : செப் 15, 2024 07:19 AM

புதுச்சேரி : பிம்ஸ் மருத்துவ கல்லுா ரியில் ஆரா 2024 கலைவிழா கல்லுாரி அரங்கில் நடந்தது.
பிம்ஸ் மருத்துவ கல்லுா ரியில் மருத்துவ மாணவர்களுக்கு தனித்திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் ஆண்டுதோறும் இசை, நடனம், பாடல், ஓவியம் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறும்.
இந்தாண்டு ஆரா-2024 கலை நிகழ்ச்சி துவக்க விழா கல்லுாரி அரங்கில் நடந்தது. மாணவர் சங்க தலைவர் மோகன்ராம் வரவேற்றார். கல்லுாரி துணை முதல்வர் நிஷாந்த் முன்னிலை வகித்தார்.
கல்லுாரி முதல்வர் ரேணு தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி 'ஆரா 2024 டீ- ஷர்ட்' அறிமுகம் செய்து கலை நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து 4 நாட்கள் நடக்கும் நிகழ்ச்சியில், இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடக்கிறது.
இப்போட்டியில், தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்படுகிறது.