/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சித்தானந்த சுவாமி கோவிலில் ஆவணி அவிட்ட நிகழ்ச்சி
/
சித்தானந்த சுவாமி கோவிலில் ஆவணி அவிட்ட நிகழ்ச்சி
ADDED : ஆக 20, 2024 04:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஆவணி அவிட்டத்தையொட்டி, குரு சித்தானந்த சுவாமி கோவிலில், பூணுால் மாற்றும் வைபவம் நடந்தது.
ஆவணி அவிட்டத்தையொட்டி, ரிக் யஜூர் வேதத்தை சேர்ந்த, பிராமண சமூகத்தினர் பூணுால் மாற்றுவதற்கான நிகழ்ச்சி, கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் நேற்று நடந்தது.
அதிகாலை 5:30 மணி முதல், ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேட்ஜ் வீதம், மதியம் 12:00 மணி வரை பூணுால் மாற்றும் வைபவம் நடந்தது.
பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இன்று 20ம் தேதி காலை 5:30 மணிக்கு சமஷ்டி காயத்ரி ஜெபம் - ேஹாமம் நடக்கிறது.

