ADDED : ஜூன் 26, 2024 02:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம், : நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்ட அளவில் நடந்த பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
பள்ளி துணை முதல்வர் தில்லைக்கண்ணு காமராஜ் தலைமை தாங்கினார்.
தலைமையாசிரியை ரோஸ்பின் மேரி முன்னிலை வகித்தார். விரிவுரையாளர் லதா வரவேற்றார். துணை சபாநாயகர் ராஜவேலு வட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
ஆசிரியர் எழில்வேந்தன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் நுாலகர் கலியமூர்த்தி, பெற்றோர் சங்கத் தலைவர் காந்திதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் பிரகாஷ் நன்றி கூறினார்.