ADDED : ஆக 16, 2024 05:32 AM
புதுச்சேரி: சுதந்திர தின விழாவில் ஆயுஷ் மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், அலுவலக பணியாளர்களுக்கு முதல்வரின் சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.
புதுச்சேரி இந்திய மருத்துவ முறை மற்றும் ேஹாமியோபதி துறை மூலமாக ஆயுர்வேதம், சித்த மருத்துவம், ேஹாமியோபதி மருத்துவ முறைகளில் வழியே பொதுமக்களுக்கு சேவையாற்றி வரும் ஆயுஷ் மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், அலுவலக பணியாளர்களுக்கு முதல்வரின் சிறந்த சேவைக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டது.
ஆயுஷ்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் ஹேமியோபதி தலைமை மருத்துவ அதிகாரி ஸ்டாலின் ஸ்டிவென்ஸன் மடிகி, சித்த மருந்தாளுநர் ஜெயலட்சுமி, சித்த மருத்துவ அதிகாரி ஜெயந்தி, சித்த மருந்தாளுநர் கல்யாணசுந்தரம், ஆயுர்வேத மருந்தாளுர் கோகுலகிருஷ்ணன், மருத்துவ உதவியாளர் பார்த்திபன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.