ADDED : செப் 13, 2024 06:44 AM

புதுச்சேரி: புதுச்சேரி கோல்டு இன்னர் வீல் கிளப் சார்பில் தேசிய ஆசிரியர் தின விழா லாஸ்பேட்டை அவ்வை நகர் நுாலக கட்டடத்தில் நடந்தது.
புதுச்சேரி கோல்டு கிளப் நிறுவனர் பங்காரம்மாள் வரவேற்றார். கிளப் தலைவர் மேரி ஷாந்தி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
புதுச்சேரி பல்கலைக்கழக பதிவாளர் தேவநாராயணன், கிருமாம்பாக்கம் அம்பேக்தர் அரசு மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் கருணாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அவ்வை மகளிர் சங்க தலைவர் பார்வதி, முன்னார் தலைவர் அனுராதா, செயலாளர் உமாபாரதி நோக்கவுரையாற்றினர்.
தமிழகம், புதுச்சேரியில் பணியாற்றும் 19 பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.
கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேனிலைப்பள்ளியின் செயல்பாடுகளை பாராட்டி, கிளப் சார்பில் 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
தங்கப்பா எழுதிய மின்னல் நுால் அனைவருக்கும் பரிசாக வழங்கப்பட்டது. கிளப் செயலாளர் உமாமகேஷ்வரி நன்றி கூறினார்.

