/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கராத்தே பயிற்சியில் 50 ஆண்டு சேவை செய்த நடுவருக்கு விருது
/
கராத்தே பயிற்சியில் 50 ஆண்டு சேவை செய்த நடுவருக்கு விருது
கராத்தே பயிற்சியில் 50 ஆண்டு சேவை செய்த நடுவருக்கு விருது
கராத்தே பயிற்சியில் 50 ஆண்டு சேவை செய்த நடுவருக்கு விருது
ADDED : ஆக 28, 2024 05:05 AM

புதுச்சேரி : கராத்தே கலையில், 50 ஆண்டுகள் சேவை செய்ததை பாராட்டி, நடுவர் ஜோதிமணிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
புதுச்சேரி, ஜெயராம் திருமண மண்டபத்தில், அகில இந்திய சமூக நல அமைப்பின், 25ம் ஆண்டு வெள்ளி விழா, சமீபத்தில் ஜெயராம் திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்த விழாவில் சமூக நல அமைப்பின் நிறுவனர் சினிமா இயக்குநர் பாக்கியராஜ், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும், நடிகர் பாண்டியராஜன், இலங்கை தமிழ் பேச்சாளர் அப்துல் அமீத், ஆகியோர் பங்கேற்றனர். இதில், கராத்தே கலையில், 50 ஆண்டுகள் சேவை செய்ததை பாராட்டி, நடுவர் ஜோதிமணிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை, இயக்குநர் பாக்கியராஜ், நடிகர் பாண்டியராஜ் உள்ளிட்டோர் அவருக்கு வழங்கினர்.