/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மன அழுத்தம் குறித்து விழிப்புணர்வு
/
மன அழுத்தம் குறித்து விழிப்புணர்வு
ADDED : செப் 01, 2024 03:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : முதலியார்பேட்டை அன்னை சிவகாமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் மன அழுத்தம் மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி முதல்வர் எழில் கல்பனா தலைமை தாங்கினார்.
அரசு மருத்துவமனை மனநல மருத்துவர் அரவிந்தன், மனநலம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார்.
உளவியல் ஆலோசகர் ராஜா மன அழுத்தம் குறித்து பேசினார். பொது சுகாதாரத்துறை செவிலியர்கள் மற்றும் ஆலோசகர் ராதிகா பங்கேற்று மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் தெய்வகுமாரி, அன்பு மொழி ஆகியோர் செய்திருந்தனர்.