ADDED : ஏப் 05, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி அரசு நலவழித்துறை காசநோய் தடுப்பு திட்டம் சார்பில், காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி உருவையாறு தாய் சேய் நல மையத்தில் நடந்தது.
கரிக்கலாம்பாக்கம் சமுதாய நலவழி மைய தலைமை மருத்துவ அதிகாரி திருமலை சங்கர் தலைமை தாங்கினார்.
காசநோய் தடுப்பு திட்ட சிகிச்சை முதுநிலை மேற்பார்வையாளர் வெங்கடகிருஷ்ணன் வரவேற்றார்.கிராமப்புற சுகாதார ஆய்வாளர் நந்தினி, உறுவையாறு சுகாதார செவிலியர் சாந்தி, காசநோய் வராமல் தடுக்கும் தடுப்பூசியின் பயன்கள் குறித்து விளக்கினார்.
சுகாதார செவிலியர் மகாலட்சுமி நன்றி கூறினார்.

