ADDED : ஆக 19, 2024 05:15 AM

புதுச்சேரி: ஹார்ட்புல்னெஸ் தியானம் மற்றும் யோகா மையம் சார்பில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடந்தது.
புதுச்சேரி, கம்பன் நகர், 5வது குறுக்கு தெருவில் ஹார்ட்புல்னெஸ் தியானம் மற்றும் யோகா மையம் இயங்கி வருகிறது. இம்மையத்தின் சார்பில், 3 நாள் இலவச யோகா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாம் 16ம் தேதி துவங்கியது. முதல் இரு நாட்கள் யோகா மற்றும் ஹார்ட்புல்னெஸ் தியான பயிற்சி அளிக்கப்பட்டது.
ஹைதராபாத்தில் உள்ள கன்ஹா சாந்தி வனம் என்கிற ஹார்ட்புல்னெஸ் இன்ஸ்டிடியூட் தலைமையக வெங்கட்ராமன் யோகா பயிற்சி அளித்தார்.
நேற்று ஸ்ரீவர்மா ஆயுர்வேத மையத்துடன் இணைந்து இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடந்தது. காலை 6:00 முதல் 7:00 மணி வரை யோகா, 7:30 மணி முதல் 8:15 மணி வரை தியானம் நடந்தது.
வெல்னெஸ் குருஜி டாக்டர் கவுதமன், நோயற்ற வாழ்வு, ஆரோக்கியமான வாழ்க்கை, ஆரோக்கியமற்ற வாழ்க்கையில் இருந்து வெளியே வருவது குறித்து சிறப்புரையாற்றினார்.
ஏற்பாடுகளை புதுச்சேரி ஹார்ட்புல்னெஸ் தியானம் மற்றும் யோகா மைய பொறுப்பாளர் பத்மபிரியா செய்திருந்தார். மண்டல பொறுப்பாளர் சித்தானந்தம் உட்பட கலந்து கொண்டனர். முன்னதாக ராஜேந்திரன் வரவேற்றார்.
முகாமில் பங்கேற்றவர்களுக்கு இலவச சிகிச்சையுடன், மருந்துகள் மற்றும் கையேடு வழங்கப்பட்டது.

