/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை முகாம்
/
ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை முகாம்
ADDED : செப் 17, 2024 04:23 AM

புதுச்சேரி : புதுச்சேரி தந்தை பெரியார் நகரில் இயங்கி வரும் பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை முகாம் நடந்தது.
மருத்துவ ஆலோசனை முகாமிற்கு, பள்ளியின் தாளாளர் புவனா வாசுதேவன் தலைமை தாங்கினார். முகாமில், டாக்டர் தீப்தி மரியா பங்கேற்று, நடைமுறைகளின் நிலைத்தன்மை, நினைவாற்றல், சீரான ஆயுர்வேத உணவு, யோகா மற்றும் மசாஜ் முத்ரா போன்ற இயற்கையான சிகிச்சை பயன்பாடுகள் குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு, ஆலோசனைகள் வழங்கினார்.
டாக்டர் விஷாலி கலந்து கொண்டு, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் கவனத்தை மேம்படுத்த இயற்கையான வழிகள், டிஸ்லெக்ஸியா, ஆட்டிசம் உள்ள குழந்தைகளை வளர்ப் பதற்கான முழுமையான அணுகு முறைகள், வீட்டிலேயே செய்ய வேண்டிய கற்றலை மேம்படுத்தும் பயிற்சி முறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

