ADDED : மே 22, 2024 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி மாநில பா.ம.க., மேற்கு பகுதி துணை அமைப்பாளர் மதியழகன் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநில பா.ம.க., மேற்கு பகுதி துணை அமைப்பாளராக மதியழகன் இருந்து வந்தார். இவர் கட்சிக்கு தொடர்ந்து, அவப்பெயர் ஏற்படும் நடவடிக்கையில் ஈடுப்பட்டதால், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதற்கான உத்தரவை கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.

