ADDED : மார் 08, 2025 03:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வங்கி ஊழியர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீ சார் விசாரிக்கின்றனர்.
உருளையன்பேட்டை, ராஜிவ் காந்தி நகர் விவேகானந்தன், 51; வங்கி ஊழி யர். குடிப்பழக்கமுடைய இவர், டி.பி., மற்றும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் விவேகானந்தன் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது மனைவி மல்லிகா புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீ சார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.