/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இ.சி.ஆரில் பேனர்: 2 பேர் மீது வழக்கு
/
இ.சி.ஆரில் பேனர்: 2 பேர் மீது வழக்கு
ADDED : மார் 11, 2025 06:09 AM
புதுச்சேரி: லாஸ்பேட்டை இ.சி.ஆரில் அனுமதியின்றி பேனர் வைத்த இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர், கட் அவுட் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இருப்பினும், போக்குவரத்து இடையூறாக பேனர்கள், கட் அவுட் வைப்பது குறையவில்லை. இதன் காரணமாக, விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம் லாஸ்பேட்டை, இ.சி.ஆர்., பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், நடைப்பாதை ஆக்கிரமித்தும் திருமண வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
இதையடுத்து, லாஸ்பேட்டை போலீசார் அனுமதியின்றி பேனர் வைத்திருந்த முத்தியால்பேட்டை மங்கேஸ்கர், 28; கோகுல்நாத், 27; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.