/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விமான நிலைய லட்சுமி நகர் ஓடை சாலையில் தடுப்பு கட்டைகள் அமைப்பு
/
விமான நிலைய லட்சுமி நகர் ஓடை சாலையில் தடுப்பு கட்டைகள் அமைப்பு
விமான நிலைய லட்சுமி நகர் ஓடை சாலையில் தடுப்பு கட்டைகள் அமைப்பு
விமான நிலைய லட்சுமி நகர் ஓடை சாலையில் தடுப்பு கட்டைகள் அமைப்பு
ADDED : ஆக 28, 2024 05:51 AM

புதுச்சேரி : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால் லட்சுமி நகர் ஓடை சிமென்ட் சாலையில், நுழைவு பகுதியில் விபத்தினை தடுக்க தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டது.
காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட புதுச்சேரி விமான நிலையம் பிரதான ஒன்றாம் எண் நுழைவு வாயிலையொட்டி லட்சுமி நகர் வெள்ளவாரி ஓடை சிமெண்ட் சாலையாக 35 கோடி ரூபாய் செலவில் மாற்றப்பட்டது.
வரவேற்கதக்க நல்ல முடிவு இருந்தாலும், சரியான திட்டமிடல் இல்லாததால் நுழைவு வாயிலில் விபத்து அபாயம் ஏற்பட்டது.
குறிப்பாக, சிமென்ட் சாலை நுழைவு வாயில் பகுதியில் 4 அடியில் சிறிய சாய்வுதளம் அமைத்து, வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மற்ற 16 அடி அகலத்திற்கு சாய்வுதளம் இல்லாமல் செங்குத்தாக மெகா பள்ளத்துடன் விடப்பட்டது. சாய்வு தளம் இல்லாத இடங்களில் தடுப்பு கட்டைகள் ஏதும் இல்லை. இதனால் இந்த ஓடை சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் லட்சுமி நகர் வழியாக செல்லும் வாகனங்கள் ஓடையில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தினமலரில் கடந்த 23ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இது தொகுதி எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம், பொதுப்பணி துறை அதிகாரிகளின் கவனத்திற்கு சென்ற நிலையில், விபத்து அபாயம் இருந்த நுழைவு பகுதியில் தடுப்பு கட்டைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சாய்வு தளத்திற்கும் தடுப்பு கட்டைகள் போடப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், வாகன ஓட்டிகளுக்கு சாய்வு தளத்தில் ஏறும்போதும், இறங்கும்போதும் பெரும் இடையூராக உள்ள விமான நிலைய பெயர்பலகை இன்னும் அப்புறப்படுத்தப்படவில்லை.
அதனையும் அகற்றி ஓரமாக வைக்க பொதுபணித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.