/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் மாவட்ட தேர்தல் அதிகாரி நேரில் ஆய்வு

ADDED : ஏப் 10, 2024 07:49 AM

புதுச்சேரி, : ஓட்டுச்சாவடிகளில் நிழற்பந்தல்,மாற்றுத் திறனாளிகள் வசதிக்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுச்சேரி பிராந்தியத்தில்-739 ஓட்டுச்சாவடி களும், காரைக்கால்-164, மாகி-31, ஏனாம்--33 என மொத்தம் 967 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஓட்டுச்சாவடிகளில் பொதுமக்கள் சிரம மின்றி வந்து ஓட்டளிப்பதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி- 4ன் வரம்பிற்குட்பட்ட காமராஜர் நகர், லாஸ்பேட்டை மற்றும் காலாப்பட்டு ஆகிய தொகுதிகளில் உள்ள ஓட்டுச் சாவடிகளுக்கு புதுச்சேரி தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் ஆய்வு மேற்கொண்டார்.
பொதுமக்களுக்கு செய்யப்பட்டுள்ள குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித் தும், நிழற்பந்தல் மற்றும், மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி சென்று ஓட்டளிக்க ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள சாய்வுதளம் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி சுரேஷ்ராஜ், அந்தந்த சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட காவல்துறை அதிகாரிகள் ஆய்வின்போது உடனிருந்தனர்.