/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அடிப்படை கணிதம் அனைத்து துறைக்கும் அவசியம் கல்வியாளர் மாறன் பேச்சு
/
அடிப்படை கணிதம் அனைத்து துறைக்கும் அவசியம் கல்வியாளர் மாறன் பேச்சு
அடிப்படை கணிதம் அனைத்து துறைக்கும் அவசியம் கல்வியாளர் மாறன் பேச்சு
அடிப்படை கணிதம் அனைத்து துறைக்கும் அவசியம் கல்வியாளர் மாறன் பேச்சு
ADDED : ஏப் 01, 2024 05:04 AM

புதுச்சேரி : 'அடிப்படை கணிதம், அனைத்து துறைகளுக்கும் அவசியம்' என, கல்வியாளர் மாறன், மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் அவர் பேசியது:
எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் வேலை வாய்ப்பு உண்டு. ஆனால், அதற்கான தகுதிகளுடன் திறன்களும் முக்கியம். அதனால், திறன் வாய்ந்த இந்தியா என்ற திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின், ஐ.ஓ.டி., ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பம், சைபர் செக்யூரிட்டி, குவாண்டம் கம்ப்யூட்டிங், ரோபோட்டிக்ஸ் ஆட்டோமேஷன், பையோ டெக்னாலஜி, மெய்நிகர் உண்மை போன்ற தொழில்நுட்பங்கள் தற்போது அசுர வளர்ச்சியடைந்து வருகின்றன.
இதில், செயற்கை நுண்ணறிவு அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் 9.30 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, பிளஸ்2 மாணவர்கள் அதற்கேற்ற படிப்புகளை தேர்வு செய்து படிக்கலாம். இருப்பினும், புரோகிராமிங், கோடிங் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் முன்பு பி.டெக்., கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்து படித்தனர். தற்போது, செயற்கை நுண்ணறிவை இணைத்து கற்பிக்கும் பி.டெக்., படிப்புகள் வந்துவிட்டன. இந்த கல்லுாரிகளை தேர்வு செய்து படிக்கலாம்.
புதியதாக மெஷின் லேர்னிங் முடித்தவர்களுக்கு, ஆண்டிற்கு ரூ. 5 லட்சம் முதல் 8 லட்சம் வரை சம்பளம் கிடைக்கிறது. அனுபவம் இருந்தால் ஆண்டிற்கு 35 லட்சம் ரூபாய் கூட பெறலாம்.
அடுத்து டேட்டா சயின்ஸ் படித்தவர்களுக்கும் வேலைவாய்ப்புக்கான கதவு திறந்தே உள்ளது. 1.15 கோடி வேலைவாய்ப்புகளை டேட்டா சயின்ஸ் துறை தரும் என மதிப்பிட்டுள்ளனர்.
தொழில்நுட்ப அப்டேட் ரொம்ப முக்கியம். பி.காம்., படித்தால் கூட தொழில்நுட்பத்தை இணைத்தே படிக்க வேண்டும். கணிதம் இல்லாமல் இன்ஜினியரிங் படித்துவிடலாம் என்று பல மாணவர்கள் நினைக்கின்றனர். ஆனால், அடிப்படை கணிதம் இல்லாமல் எந்த துறையும் இல்லை என்பதை புரிந்து கொண்டு, கணித அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும், உங்களை நீங்களே சுய மதிப்பீடு செய்து, வாழ்வில் முன்னேற வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

